
posted 19th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நாட்டின் முதுகெலும்பு ஊடகமே
“நாடு கடந்த ஆட்சியில் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருந்த பொழுது அந்த நாட்டை மீட்டு பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகங்களே. ஒரு நாட்டின் முதுகெலும்பு ஊடகம் என்றால் அது மிகைஅல்ல.”
இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் அக்கறைப்பற்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில்;
நாட்டில் முன்னர் கோர ஆட்சி இடம் பெற்றது. ஏழு லட்சம் பேர் வேலை இழந்தார்கள். பிழையான கொள்கை, அத்தியாவசிய சேவை மற்றும் விவசாயத்திலே கை வைத்தார்கள். ஊழல்கள், மோசடிகள் மலிந்தன. நாடு பின் தள்ளப்பட்டது. இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகமே.
இன்று அத்தகைய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர எத்தனிக்கிறார்கள். அப்படியானால் ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதனை முற்றாக எதிர்க்கின்றோம்.
கடந்த காலத்திலே தமிழுக்கும் தேசியத்துக்குமாக பயணித்த சிவராம், நடேசன், நிர்மலராஜன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால், இன்றும் அவர்கள் நினைவுகூரப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் பக்க சார்பின்றி நியாயமாக ஊடக தர்மத்தின் படி சேவை ஆற்றியவர்கள்.
எனவே, சமூக ரீதியாக நீங்கள் இயங்கி பக்கச்சார்பற்று சிறப்பாக நீங்கள் இயங்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)