
posted 10th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவு
அம்பாறை மாட்டத்தைச் சேர்ந்த காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் சொத்தளிவுக்குள்ளாகிய பொது மக்களுக்கு நஷ்ட ஈட்டுக் கொடுப்பணவுகள் வழங்கப்பட்டன.
இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் சொத்தழிவுக்குள்ளாகிய காரைதீவு-10 மற்றும் காரைதீவு-11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் 06 பயனாளிகளுக்கான நட்டஈட்டுக்கொடுப்பனவுக்கான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)