
posted 10th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய விமான தாக்குதல்
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலில் உயிரிழந்த 147 பேரின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நினைவுகூரப்பட்டது.
இந்த நினைவேந்தல் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.
விசேட வழிபாட்டை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இராணுவத்தின் முன்னேறி பாய்தல் நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், கதிர்காம முருகன் ஆலயத்தில் போன்ற கோவில்களில் பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருந்தனர்.
1995 ஜூலை 9ஆம் திகதி விமானப் படையின் விமானங்கள் குண்டு வீசியதில் சிறுவர்கள், பெண்கள் என 147 பேர் உயிரிழந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)