
posted 26th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான செயலமர்வு
சாய்ந்தமருது சமுர்த்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விசேட செயலமர்வு திங்கட்கிழமை (24) சமுர்த்தி வங்கிச் சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு, மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா, முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் மாவடிப்பள்ளி கிளை என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்த இச்செயலமர்வை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மெளலவி ஏ.எம். அஷ்ரஃப் வளவாளராகக் கலந்து கொண்டு, முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விடயங்கள் தொடர்பாக செயல்முறை ரீதியாக விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் எம். முபீதா,
பொருளாளர் ஏ.எம். பசீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)