
posted 12th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சோனப்பு மாட்டுவண்டி சவாரி
தமிழ்த்தேசியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உடுப்பிட்டி நல்லூர்த் தொகுதிகளின் பாராளும ன்ற உறுப்பினருமான அமரர் சிவசி தம்பரத் தின்100 வது ஜெனன தினத்தை முன்னிட்டு கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினால் அண்மையில் சோனப்பு மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி நடாத்தப் பட்டது.
கரவெட்டி அபிருத்தி ஒன்றியத்தின் தலைவர் உபாலி சி பொன்னம்பதலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதன் போசகரும் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி ஆ.கேதிஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கண்டிருந்தார்.
போட்டிகள்பல்வேறு பிரிவுகளாக நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்புட்ட முதல் மாட்டு வண்டிகளுக்கே பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் வட மாகாணத்தின் பல்வெறு பகுதிகளிலிருந்தும் மாட்டுவண்டிகள் போட்டியில் பங்குபற்றியிருந்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)