
posted 12th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு
கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் செயற்படுவோம் மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் செவ்வாய் (11) இடம்பெற்றது.
பிற்பகல் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் அ. இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விருந்தினர் வரவேற்கப்பட்டதை அடுத்து தேசியக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
ஆரம்பக் கல்வி மாணவர்களின் அணி வகுப்பு நிகழ்வினைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் போது, மாணவர்களிற்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)