
posted 5th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 20ஆம் ஆண்டு நிறைவு
கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரி மண்டபத்தில் நேற்று முன் தினம் திங்கள் (03) நடைபெற்றது.
சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. சிறிசற்குணராசா, சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி மனோமோகன் தம்பதியினர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அத்துடன், ஆறு. திருமுருகனின் வாழ்க்கை வரலாற்றை ரிஷி தொண்டுநாதன் சிறு தொகுப்பாக எழுதிய கையேட்டு நூலும் வெளியிடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)