
posted 3rd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறிலங்கன் பமிலி செரண்டிப் பவுண்டேசன் கல்வீடு அன்பளிப்பு
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட பலாச்சோலை எனும் கிராமத்தில் மூன்று பிள்ளைகளுடன் ஓலைக் குடிசையில் வசித்து வந்த சுந்தரலிங்கம் தர்சினி என்னும் குடும்பத்திற்கு லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டுவரும் சிறிலங்கன் பமிலி செரண்டிப் பவுண்டேசன் எனும் அமைப்பினால் 1,265,000 ரூபாய் பெறுமதியான கல்வீடு ஒன்று அமைக்கப்பட்டு உரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின் போது இப் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் குணரெட்ணம் ரகுலோட்சனன் மற்றும் அப்பகுதி மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
“ஓலைக் குடிசையில் இருந்து கொண்டு தினமும் நாட்கூலி வேலை செய்து தமது குடும்பத்தைப் பார்த்து வந்த எமக்கு இவ்வாறு ஓர் நிரந்தர கல்வீடு கிடைக்கப்பெற்றமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. எமக்காக தாமாகவே முன்வந்து வீட்டை அமைத்து தந்த இவ் அமைப்பினருக்கு தமது ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சுந்தரலிங்கமும், தர்சினியும் குடும்பமாக தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)