
posted 10th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிந்தக்க அபேவிக்ரம கடமையேற்பு
அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட சிந்தக்க அபேவிக்ரம இன்று திங்கட்கிழமை (10) சமயப் பெரியார்களின் நல்லாசியுடன் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜகதீஸன், மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவர் இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)