
posted 22nd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சாணக்கியன் தாக்கிய குற்றச்சாட்டில் 10 பேர் அடையாளம்
மட்டக்களப்பில் இரா. சாணக்கியன் எம். பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தலைமறைவாக உள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பு நிலையத்தில் சம்பவ தினமான கடந்த திங்கட்கிழமை அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பேருந்துக்களை தடுக்கக் கோரி தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர், சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாணக்கியனும் கலந்து கொண்டார்.
இதன்போது, சாணக்கியன் இந்த போக்குவரத்து அனுமதியில் ஊழல் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் கட்சி ஒன்று இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். இதன்போது அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது இருவரை சிலர் விரட்டி விரட்டி தாக்கினர்.
இதில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையிலேயே இவர்கள் மீது தாக்குதல் நடத்திய மூவரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)