
posted 31st July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சாணக்கியனின் முயற்சியில் இடம்பெற்ற நிர்வாகத்தெரிவு
தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் உந்துதலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு 30.07.2023 அன்றைய தினம் இடம்பெற்றது. சாணக்கியன் அவர்களின் முழு முயற்சியில் மட்டக்களப்பில் வட்டாரக்கிளை, பிரதேசக்கிளை மற்றும் தொகுதிக்கிளை முறையே அமைக்கப்பட்டு ஞாயிறு (30) அன்று மாவட்ட நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி. புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றது.
1.தலைவராக : இரா. சாணக்கியன் பா.உ,
2.செயலாளராக:ஞா. ஶ்ரீநேசன், மு.பா.உ,
3.பொருளாளராக: சீ.யோகேஷ்வரன். மு.பா.உ,
4.உபதலைவராக:பா. அரியநேத்திரன், மு.பா.உ
5.உப செயலாளராக: தி. சரவணபவான், மு.மா.முதல்வர்.
மற்றும் 10 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவானார்கள்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)