கொட்டலீய பால மரணங்களுக்கு ஹக்கீம் அனுதாபம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கொட்டலீய பால மரணங்களுக்கு ஹக்கீம் அனுதாபம்

கொட்டலீய பால மரணங்களுக்கு ஹக்கீம் அனுதாபம்

அண்மைக்காலமாக நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வீதி விபத்துக்களும் கூடிக் கொண்டே போகின்றன இவ்வாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மண்ணம்பிட்டி பஸ் விபத்து தொடர்பில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கதுறுவெலையிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், மன்னம்பிட்டி, கொட்டலீய பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்ததனால் ஏற்பட்ட மரணங்கள் மக்கள் மத்தியில் பரவலான அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன. அத்துடன், இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

இந்தப் பாலம் அமைந்துள்ள இடத்தில் முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டு, மரணங்கள் சம்பவித்திருந்த போதிலும் கூட, இவ்வாறான பாரிய விபத்துகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் இதுவரையில் உரிய முறையில் மேற்கொள்ளாதது பலத்த கண்டனத்துக்குரியது.

அத்துடன், அதிகமான பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களைச் செலுத்திச் செல்லும் சாரதிகளும் இவற்றிற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பலர் இந்த விபத்தில் உயிரிழந்தும், காயமுற்றும் உள்ளனர்.

அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, மரணித்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொட்டலீய பால மரணங்களுக்கு ஹக்கீம் அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)