கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மர்மம். நீதி கோரி முல்லையில் திரண்டனர் மக்கள்!

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மர்மம். நீதி கோரி முல்லையில் திரண்டனர் மக்கள்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் - சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் நேற்று வெள்ளிக்கிழமை (28) பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இறுதிப் போர் சமயத்தில் அதிகமானவர்கள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட இடத்தில் - தற்போது முல்லைத்தீவு நீதிமன்றம் அமைந்துள்ள இடமருகே பேரணி ஆரம்பமானது.

அங்கிருந்து நகர்ந்த பேரணி நீதிமன்றத்துக்கு முன்பாக சென்று மாங்குளம் - முல்லைத்தீவு வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரகடன அறிக்கையும் விடுக்கப்பட்டது.

பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றவர்கள்,

  • “சர்வதேசமே எமக்காக குரல் கொடு”
  • “செம்மணியில் அன்று கிரிசாந்தியை புதைத்தார்கள், அன்று தொடர்ந்த புதைகுழிகள்... தற்போது, கொக்குத்தொடுாய் புதைகுழி முன்வந்து நிற்கின்றோம்.”
  • “சர்வதேச விசாரணையை எமக்கு வேண்டும்”
  • “குருந்தூர்மலை மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து”
  • “காணி அபகரிப்புகளை நிறுத்து”

போராடிபோன்ற பல கோஷங்களை முன்வைத்தனர்.

இந்தப் பேரணியிலும் போராட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மர்மம். நீதி கோரி முல்லையில் திரண்டனர் மக்கள்!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)