கைவேலி குடும்பங்களை மீளவும் அதே இடத்தில் குடியமர்த்த உறுதி!

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கைவேலி குடும்பங்களை மீளவும் அதே இடத்தில் குடியமர்த்த உறுதி!

தாங்கள் இருந்த இடத்திலேயே தம்மை மீளக்குடியமர அனுமதிக்கக்கோரி 20 குடும்பங்கள் நடத்திய போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அவர்கள் மீளவும் அதே இடத்தில் குடியமர காணிகளை பகிர்ந்தளிப்பதாக முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் அளித்த உறுதியைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - கைவேலி கிராமத்தில் தாங்கள் இருந்த இடத்திலேயே தம்மை மீளக் குடியமர்த்த வலியுறுத்தி இரு நாட்களாக நான்கு பேர் உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செவ்வாய் (25) தினம் முல்லைதீவ மாவட்ட மேலதிக அரச அதிபர் க. கனகேஸ்வரன் மற்றும் நில அளவை திணைக்களத்தின் அதிகாரிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள், வனவள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்த இடத்துக்கு வருகை தந்து குறித்த காணிகளை பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில், மக்கள் குடியேறிய பகுதி வனவளத் திணைக்களத்தினுடைய பகுதிக்குள் இல்லை என நில அளவைத் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை அந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

கைவேலி குடும்பங்களை மீளவும் அதே இடத்தில் குடியமர்த்த உறுதி!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)