
posted 8th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிளிநொச்சி சிவபாத கலையக மாணிக்க விழா
கிளிநொச்சி சிவபாத கலையகம் பாடசாலையின் மாணிக்க விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று 7ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பாடலை முதல்வர் பரமேஸ்வரி சோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
கலாச்சார முறையில் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டு பின்னர் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், மாணிக்கத் தடம் எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் பிரதியை வடமாகாண பிரதம செயலாளர் வெளியிட்டு வைக்க, கலாநிதி சர்வேஸ்வரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கலைநிகழ்வுகளும், பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதி அரசாங்க அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)