
posted 28th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கறுப்பு ஜுலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
கறுப்பு ஜுலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று (27) வியாழக்கிழமை 4.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்றலில் நடைபெற்றது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், மு.நா.ம உறுப்பினர்களான அரியநேந்திரன், சிவாஜிலிங்கம், உள்ளிட்ட அரசியற் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)