
posted 10th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கடல்வளம் அழிக்கப்பட்டால் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு அறிவிக்கப்படும்
தமிழ்நாடு மீன்பிடி ட்றோலர்களால் வடபகுதி கடல்வளம் அழிக்கப்படுவது தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எடுத்துச் சொல்லப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடபகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகம் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வடபகுதி கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்நாடு மீன்பிடி ட்றோலர்கள் ஒரு தடவையில் சராசரியாக 18 கிலோ மீனை பிடித்துச் செல்கின்றன.
தமிழ்நாடு மீன்பிடி ட்றோலர்கள் வழித்துத் துடைத்து மீனை அள்ளிச்செல்வதால் வட பகுதி மீனவர்களின் இழப்பு அளவிட முடியாதது என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)