
posted 3rd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உள்நாட்டு விமான சேவை
இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று முன்தினம் சனி (01) ஆரம்பமானது என்று இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சேவை மூலம், கொழும்பில் இருந்து ஒரு மணித்தியாலமும் 10 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும். இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நான்கு நாட்களில் காலை வேளைகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 விமானம் இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றது. ஒரு வழிக்கட்டணமாக ரூ. 22 ஆயிரம் ரூபாயும், இரு வழிக்கட்டணமாக ரூ.41 ஆயிரத்து 500 அறவிடப்படும். இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதிகளைக் கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)