
posted 18th July 2023
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உலருணவுப் பொதிகளை வழங்கிய ஐங்கரநேசன்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07 2023 ) நாவற்குழி வடக்கு மற்றும் அராலி மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் அடங்கிய இப்பொதிகளைக் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அப்பகுதிகளுக்குச் சென்று வழங்கிவைத்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்கள் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)