
posted 18th July 2023
உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டு சீருடைகள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டு சீருடைகள்
கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டு சீருடைகள், விளையாட்டு உபகரணம் வழங்கல்...!
கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு தேவையான விளையாட்டு சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் தேசோதய சபைத் தலைவர் இ. மயில்வாகனம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கோப்பாய் தேசோதய சபை உறுப்பினர்களும் சமுக செயற்பாட்டாளருமான தே. றமணதாசன், மற்றும் சமாதான நீதவான் சா. தவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு சீருடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
இதற்கான நிதியினை கொலண்ட் நாட்டில் வசிக்கும் மு. லலிதா நன்கொடையாக வழங்கிவைத்திருந்தார்.
இதேவேளை உரும்பிராய் கிழக்கில் பாரிசவாத நோயால் பாதிக்க பட்ட முதியவர் ஒருவருக்கு நான்கு சக்க நட்சக்கர வண்டில் ஒன்றும் அக் குடும்பத்தினரின் வேண்டுதலின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)