
posted 24th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆலயக் குழுவினர் - ஆளுநர் கலந்துரையாடல்
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயமானது இந்திய சோழர்கால வம்சத்தினருடன் இணைந்து புதுப்பொலிவு பெறும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தன்னைச் சந்தித்த ஆலயக் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்தார் .
இவ்வாலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான குழுவினருக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த சந்திப்பு மட்டக்களப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அச்சமயம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம், இந்துசமய ஆர்வலர்களான வி.ரி. சகாதேவராஜா, சுந்தரலிங்கம் முகுந்தன் (லண்டன்) ஆகியோர் உடனிருந்தனர்.
பரிபாலன சபை சார்பில் பொருளாளர் கே. கிருஷ்ணமூர்த்தி, கணக்காளர் எஸ். லோகிதராஜா, பதில் செயலாளர் கே. சதீஷ்குமார், பணியாளர் கே. நடேசபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஓகஸ்ட் 16 ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகின்றது. அதனையொட்டி இந்த கலந்துரையாடல் பெற்றது.
சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட பழம் பெரும் இவ் ஆலயம் தொடர்பான வரலாற்று விவரங்களை பரிபாலன சபையினர் எடுத்துரைத்தனர்.
ஆளுநர் கூறுகையில்,
வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்யுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூறுங்கள். ஆலய உற்சவத்துடன் தொடர்புடைய அத்தனை திணைக்களம் மற்றும் நிறுவனங்களின் உதவி ஒத்தாசை நிச்சயமாக கிடைக்கும். இந்திய உதவியோடு இந்த ஆலயம் மேலும் புதுப்பொலிவு பெறும் என்று நம்பிக்கை இருக்கின்றது. உற்சவகாலத்தில் ஒரு நாள் நானும் விஜயம் செய்வேன். சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)