
posted 2nd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட, பிரதேச, திணைக்களங்கள் சார்ந்த அபிவிருத்தி வேலைகளுக்கு நிருவாக ரீதியாக அனுமதி எடுப்பதற்கும், நல்ல ஆலோசனைகளைப் பெறுவதற்கும் அபிவிருத்திக் கூட்டங்கள் நடத்தப்படுவது முறைமையாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா. துரைரெத்தினம் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வருடங்களாக மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஏற்பட்டிருக்கின்ற சில கருத்து முரண்பாடுகள் காரணமாக எந்தளவிற்கு அபிவிருத்தி தொடர்பாக ஆரோக்கியமான முடிவுகள் அபிவிருத்திக் கூட்டங்களில் எட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த வருடம் இம் மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி புதிய திட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. என்னென்ன புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த வருடம் அமுல்படுத்தப்பட வேண்டிய எந்தத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. எந்தத் திட்டங்கள் முரண்பாடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இன்னும் பல விடயங்களுக்கு எவ்வித முடிவுகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதும், இந்த ஆண்டுக்கான அனுமதியை வழங்குவதும் கட்டாயத் தேவையாக உள்ளது.
சில மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளுக்குள் அபிவிருத்தி கூட்டங்களின் போது சில மக்கள் பிரதிநிதிகள் முரண்பாடுகள் காரணமாக நடந்து கொள்ளும் முறையென்பது எந்தளவிற்கு அபிவிருத்தியில் ஆரோக்கியமானது என்னும் கேள்வி ஊடகங்களை உற்று நோக்குகின்ற சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் முடிவுகளை எடுப்பதற்காகவும், அனுமதியைப் பெறுவதற்காகவும், காத்திருந்து பொறுமையுடன் இருக்கும் திணைக்களத் தலைவர்கள் நம்பி ஏமாந்து போன கசப்பான சில சம்பவங்களும் ஏன் இருக்க முடியாது?
மக்கள் பிரதிநிதிகளுக்குள் உள்ள விடயங்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு கணம் சில முடிவுகளை அனுமதிகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வரும் அரச நிருவாகிகள் மனக் கசப்புடன் ஏமாந்து போனது வரலாறாகும். இவைகளுக்கு அப்பால் திணைக்களங்களுக்கும், பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் முடிவு எடுக்க முடியாமல் மௌனித்துப் போன பல விடயங்கள் உள்ளது.
அபிவிருத்திக் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை அமுல்படுத்துவதற்கும், நல்ல ஆலோசனைகளைப் பெறுவதற்கும் வலுச்சேர்ப்பதற்காகவே நடத்தப்படுவதாகும். ஆனால், மாவட்டச் செயலகத்திற்கு முன் வெகுஜன ரீதியான போராட்டங்கள் நடத்தப்படுமானால் அத்துறை சார்ந்த தலைவர்களும், நிருவாகத்தை நெறிப்படுத்துகின்ற (அனுமதி அளிக்கின்ற) அரசாங்க அதிபரும் பொறுப்புக் கூற வேண்டும். இதற்கு வழிகாட்டியாக அபிவிருத்திக் குழு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். இவைகள் ஏன் நடை பெறவில்லை? இதேவேளை வெகுஜன போராட்டங்களில் பங்கு கொள்ளுகின்ற மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஆரோக்கியமாக நடந்து கொள்கின்றார்களா? ஆரோக்கியமாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமைகளும் இருக்க வேண்டும். அப்படி பொறுப்பு இல்லாத மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்திக் கூட்டங்களுக்கு சமூகமளிக்காது எடுக்கும் முடிவுகளுக்கு சங்கடங்களை விளைவிக்காது நடந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் கால கட்டங்களில் அபிவிருத்தித் தொடர்பாக மாவட்ட நலன்கருதி எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக ஆரோக்கியமாக நடந்து கொள்ளாத பட்சத்தில் சமூகம் தனது கடமைகளைச் செய்யும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
அனைவரும் நல்லவாக்கள், ஆரோக்கியமானவர்கள், திறமைசாலிகள், போட்டியில் வெல்லக் கூடியவர்கள், நேர்மையானவர்கள், மக்கள் நலன் கொண்டவர்கள் தங்கள் கடமைகளை செவ்வென நிறைவேற்றக் கூடியவர்கள். எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் சமூகம் நலன்சார்ந்து செயற்படக் கூடியவர்கள் என்னும் நம்பிக்கையுடன் செயற்படுவீர்கள் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)