
posted 20th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆடி வேல் விழா கொடியேற்றம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவடி கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (18) சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து விசேட பூஜையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அடியார்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளக்க ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.
ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள் இடம்பெற்று ஓகஸ்ட் 02ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது ஆலய பரிபாலன சபை செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)