
posted 22nd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
ஆடி வேல் விழா
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (18) சிறப்பாக நடைபெற்றது.
முற்பகல் 10.30 மணியளவில் வசந்த மண்டப சிறப்பு பூஜையை அடுத்து ஆலய வண்ணக்கர் டி. எம். சுதுநிலமே திஸநாயக்க கொடிச் சீலையை சிரசில் வைத்து தாங்கிவந்தார்.
பலநூறு அடியார்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க சரியாக 11.20 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத் திருவிழா ஆலய பிரதம குரு சிவசிறீ க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்று ஓகஸ்ட் 2ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும்.
இந்தத் திருவிழாவை ஒட்டி விசேட பேருந்து சேவை மற்றும் அன்னதான சேவை நடைபெற்று வருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)