அம்பாறை ஊடக சங்கம் - உபதலைவராக சலீம்
அம்பாறை ஊடக சங்கம் - உபதலைவராக சலீம்

எமது கிழக்கு மாகாணச் செய்தியாளருக்கு தேனாரம் இணையத்தளம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறை ஊடக சங்கம் - உபதலைவராக சலீம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் சங்கத்தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான வசந்த சந்திரபால தலைவமையில், அம்பாறை தெஹிகொல்ல விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இந்தப் பொதுக் கூட்டத்தில் நடப்பு வருட உத்தியோகஸ்த்தர்கள் தெரிவு இடம்பெற்றபோது, சிரேஷ்ட ஊடகவியலாளர் வசந்த சந்திரபால மீண்டும் சங்கத்தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சங்கத்தின் உப தலைவராக கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமும், செயலாளராக ரவூந்திர மெதகெதரவும், பொருளாளராக சமன் மாணிக்காராய்ச்சியும், உப செயலாளராக தயானந்த அதிகாரியும் ஏகமதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், ஆறு பேர் கொண்ட நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பொதுக் கூட்டத்தின் சிறப்பு அம்சமாக சங்கத்தினால் நடத்தப்பட்ட குறுஞ்செய்தி போட்டியில் வெற்றி பெற்ற 10 ஊடகவியலாளர்களுக்கு பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலாளர்களான சமன் மாணிக்காராய்ச்சி, ரவீந்திர மெத கெதர, கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம், வீ.சுகிர்த குமார், யொவிதுபானுக, தயானந்த அதிகாரி, அஜித் குணரத்ன, உபுல் விஜயசிங்க, அச்சல உபேந்திர, எச். ஜெயசிங்க ஆகியோர் இதன் போது பணப் பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.

தலைவர் வசந்த சந்திரபால தம்மை மீண்டும் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையில், மூவின ஊடகவியலாளர்களையும் ஒருங்கிணைத்த எடுத்துக்காட்டான இந்த சங்கத்தை மேலும் முன்னேற்றகரமாக வழி நடத்துவதற்குத்தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுத்திட சங்கற்பம் பூண்டுள்ளதாகவும்,
ஊடகத்துறையில் பிராந்திய செய்தியாளர்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு, அவர்களது சேவைக்கான உயர்ந்தபட்ச பயன் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டுமெனவும் கூறினார்.

அம்பாறை ஊடக சங்கம் - உபதலைவராக சலீம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)