அதிகரிக்கும் மதுபாவனை - உயர்வடையும் நரம்பியல்சார் நோய்கள் - மருத்துவ நிபுணர் அஜந்தா

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அதிகரிக்கும் மதுபாவனை - உயர்வடையும் நரம்பியல்சார் நோய்கள் - மருத்துவ நிபுணர் அஜந்தா

அதிகரித்த மது பாவனையாலேயே வடக்கில் நரம்பியல்சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளது என்று யாழ். போதனா மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (19) புதன் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தை அல்லது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூளை சம்பந்தமாக ஏற்படும் மூன்று நோய்கள் பற்றி நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.

பக்கவாதம் என்பது பொதுவாக மக்களிடையே காணப்படுகின்றது. நடுத்தர அல்லது வயது கூடியவர்களிடம் காணப்படுகின்ற ஒரு பொதுவான நோயாக இது காணப்படுகின்றது. யாழ் போதனா மருத்துவமனைக்கு ஒரு நாளில் 6 தொடக்கம் 7 நோயாளர்கள் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறார்கள்.

இதேபோல வீதி விபத்துகளில் மூளை சிதைவுகள் மற்றும் ஏனைய காரணங்களால் இறப்பு கூட ஏற்படுகின்றது. வீதி விபத்துகளால் இள வயதினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள். தொற்றா நோய்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு உயர் குருதி அமுக்கம் இருக்கின்றது என்பதை அறிந்தால் அவர் அவருடைய வாழ்நாள் பூராகவும் அதன் தாக்கம் உடம்பில் இருக்கும் என்பதுதான் அர்த்தம். ஆகவே, அவர் குறிப்பிட்ட மருந்தை அவர் உட்கொள்வதுடன் குறைந்தது 3 - 6 மாத இடைவெளியில் மருத்துவரை நாடி சோதனைக்கு உட்படுவதுடன், உரிய மாத்திரைகளை எடுப்பதன் மூலம் நரம்பியல் நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதிகரித்த மது பாவனையால் வடக்கு மாகாணத்தில் நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது வடக்கில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாலேயே நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் இன்சுலின் உற்பத்தி தடைப்படுகின்றது மது பாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதேபோல போதைப் பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்புக்கு காரணமாகும்.

குறிப்பாக, இளையவர்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, அதிகரித்துள்ள மதுபாவனை, போதைபொருள் பாவனையால்அவர்கள் அறியாமலே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. மது பாவனையை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அதிகரிக்கும் மதுபாவனை - உயர்வடையும் நரம்பியல்சார் நோய்கள் - மருத்துவ நிபுணர் அஜந்தா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)