
posted 5th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அஞ்சலி நிகழ்வு
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரையின் 26ஆவது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு கிளிவெட்டியில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த வருடம் மக்களால் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சிலைக்கு தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சி. துரைநாயகம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, கிளிவெட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், பாடசாலையின் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)