
posted 3rd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று (02) ஞாயிறு பக்திபூர்வமாக நடைபெற்றது.
நயினை நாகபூசணி அம்மனுக்கும் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை விசேட அபிசேகம் இடம்பெற்று வசந்த மண்டப பூசை நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு நாகபூசணி அம்மன் பரிவார தெய்வங்களுடன் தனித்தனி தேர்களில் ஆரோகணித்தார். இந்தத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)