
posted 15th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ். கோட்டையில் 133ஆவது தொல்லியல் தினம்
இலங்கை தொல்லியல் திணைக்களம் ஆரம்பமாகி 133 ஆவது ஆண்டினை முன்னிட்டு தொல்லியல் தினம் யாழ் கோட்டையில் இடம்பெற்றது.
இது ஒரு மரபுரிமைசார் விழிப்புணர்வு நடவடிக்கையாக யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை மற்றும் கலாசார சுற்றுலாத்துறை மாணவர்களுக்கு தொல்லியல் செயற்பாடுகளில் பயன்படுத்தபடும் முறைமைகள் குறித்த பயிற்சிகளை வழங்கி மாணவர்களை குறித்த துறைசார் நிபுணர்களுக்கு மாற்றுகின்ற செயற்பாடாக இது அமைந்துள்ளது.
இதன்பொழுது மேலாய்வு, மேலாய்வு ஜிபிஎஸ் முறை, அகழ்வாய்வுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் அகழ்வாய்வு பிரயோகம் ஆகியவற்றை உள்ளடக்கி இப்பயிற்சி காணப்படும்.
வியாழன் (13) ஆரம்பிக்கப்பட்ட இதன் ஆரம்ப நிகழ்வுகளில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ். பல்கலைக்ககழக விஞ்ஞான பீடாதிபதி, தொல்லியல்துறை முன்னாள் பணிப்பாளர் நிமால் பெரேரா, பிரதேச தொல்லியல் காரியாலய உதவிப் பணிப்பாளர் யு.ஏ. பந்துலஜீவ, கலாசார மத்திய நிதிய திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)