
posted 23rd July 2023
உறவுகளின் துயர் பகிர்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மாணவ தலைவர்களுக்கு பதக்கம் சூட்டும் வைபவம்
திருக்கோணமலை மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் மாணவத் தலைவர்களுக்கான பதக்கம் சூட்டும் வைபவம் கல்லூரியின் முதல்வர் வி. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிதாக நேர்முக பரீட்சையின் அடிப்படையில் 52 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மாணவத் தலைவர்களுக்கான பதக்கம் சூட்டப்பட்டதுடன், புதிய தலைமை மாணவத் தலைவருக்கு உத்தியோகபூர்வமாக பொறுப்புக்கள் பழைய தலைமை மாணவ தலைவரால் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பிரதி அதிபர் கே. ராதாகிருஷ்னன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர்களும், சட்டதரணிகளுமான கோபிகிசாந் , சஸ்லி அகியோர் கலந்து சிறப்பித்ததுடன், பொற்றோர்கள், ஆசிரியர்கள் உப அதிபர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)