புஷ்பக 27 முழு நீளத் திரைப் படம்

உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புஷ்பக 27 முழு நீளத் திரைப் படம்

இலங்கையில் முதல்முறையாக விண்வெளி கதையை மையமாகக் கொண்டு உயர் தொழில் நுட்பத்தில் தயாரான புஷ்பக 27 முழு நீளத் திரைப் படத்தின் குறுந்திரை முன்னோட்டம் நேற்று முன் தினம் புதன்கிழமை (05) மாலை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், மருத்துவர் சிவன்சுதன், ஈழத்தின் மூத்த திரைப்பட நடிகர் இராஜ மகேந்திரசிங்கம், மூத்த ஊடகவியலாளர் இரா. பாரதி, லண்டன் கருவி நிறுவனத் தலைவர் சிவாஜி. சேகரம், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா, திரைப்பட ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புஷ்பக 27 திரைப்பட கலைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

புஷ்பக 27 திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டத்தை பேராசிரியர் ரகுராம், மருத்துவர் சிவன்சுதன், திரைப்பட நடிகர் இராஜ மகேந்திரசிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

தொடர்ந்து பேராசிரியர் ரகுராம், மருத்துவர் சிவன் சுதன், ஊடகவியலாளர் இரா. பாரதி ஆகியோர் சிறு கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வின் இறுதியில், புஷ்பக 27 திரைப்பட இயக்குநர் காரை. சிவநேசன் தனது கருத்துக்களை தெரிவித்ததுடன் எதிர்வரும் செப்ரெம்பர் வாரத்தில் இந்தத் திரைப்படம் திரைக்கு வரும் எனவும் யாழ்ப்பாணத் தில் மூன்று காட்சிகளை காட்சிப்படுத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திரைப் படத்துக்கான திரைக்கதையை சத்திய மென்டிஸ் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புஷ்பக 27 முழு நீளத் திரைப் படம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)