
posted 15th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு
நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பத்தவர்களுக்கு சமூர்த்தி சௌபாக்கியா வீடமைப்புத் திட்டத்தின் மூலம் புதிய வீடுகளை நிர்மாணித்து கையளிக்கும் நிகழ்வு தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி. அன்வர் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் 23 ஆம் பிரிவில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக புதிதாக கடமையேற்ற சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம் சம்பிரதாய பூர்வமாக கையளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)