
posted 18th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாலியல் துஷ்பிரயோகம்
7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையையும் மாமனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாயார் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த சிறுமியை, 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய சிறுமியின் மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தனர் என்று கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது, 14 நாட்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)