
posted 26th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நூல்கள் அன்பளிப்பு

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணியினால் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு ஒரு தொகை நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்நூல்களில் ஒரு பகுதி பாடசாலை நூலகத்திற்கும் மற்றொரு பகுதி பாடசாலையின் ஒரு பிரிவான கிறின்வீச் ஆங்கில பாலர் பாடசாலைக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஆங்கில பாலர் பாடசாலைக்கான நூல்களை அண்மையில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஏ.ஆர். ஜூபிரிடம் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் வழங்கி வைத்தார்.
மிகவும் பயன்மிக்க, பெறுமதியான இந்நூல்களை அன்பளிப்பு செய்தமைக்காக முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணிக்கு இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)