
posted 5th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நடமாடும் சேவை
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவை திணைக்களங்களின் சேவைகளை ஒன்றிணைத்து வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ராகுலநாயகிவழி நடத்தலில் திருபழுகாமம் கலாசார மண்டபத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக சமூக சேவை பிரிவுக்கான சேவைகள், காணி பதிவாளர், தேசிய அடையாள அட்டை மற்றும் சமுர்த்தி போன்ற பிரிவுகளுக்கான சேவைகள் உட்பட வலது குறைந்தவர்களுக்கான சேவை, முதியோர்களுக்கான சேவை, மூக்குக்கண்ணாடி சேவை, ஆயுர்வேத மருத்துவ சேவை, உளநல மருத்துவ சேவைகள், பற்சிகிச்சை முகாம் போன்ற சேவைகள் இடம் பெற்றதுடன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் உடல் திணிவுச் சுட்டெண், நீரிழிவு பரிசோதனைளும் இடம்பெற்றன.
இதில் பங்குபற்றியோருக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் துலஞ்சனன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், போரதீவுப்பற்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என பலர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)