
posted 24th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தாழங்குடாவில் நடமாடும் சேவை
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் மற்றும் சுகாதாரம் சுதேச வைத்திய அமைச்சால் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழங்குடாவில் நடமாடும் சேவை சனிக்கிழமை (22) நடந்தது.
இந்த நடமாடும் சேவையில் பிரதேச செயலகத்தின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன், பொலிஸ் சேவை, ஆயுள்வேத வைத்தியம் சமூக சேவை நிலையத்தின் சேவைகளும் வழங்கப்பட்டன.
இதன்போது சமூக சேவைகள் திணைக்களத்தால் விசேட தேவை உடையவர்களுக்கான ஊன்றுகோலும் வழங்கி வைக்கப்படன. மேலும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)