
posted 9th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சாதனை படைத்த திருச்செல்வம்
7 நிமிடங்கள் 48 செக்கன்களில் ஆயிரத்து 550 கிலோ கிராம் எடை கொண்ட வாகனத்தை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து சென்று சாதனை படைத்துள்ளார் தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ. திருச்செல்வம்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் நடைபெற்றது.
அவரின் இந்த சாதனையைப் பார்ப்பதற்கு பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)