
posted 20th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிறைம் செய்திகள்

போதைப் பொருளுடன் இளைஞரும் பெண்ணும் கைது!
எஸ் தில்லைநாதன்
ஹெரோயினுடன் ஆண் ஒருவரும், கோடாவுடன் பெண் ஒருவருமாக இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
40 மில்லிகிராம் ஹெரோயினுடன் 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதேசமயம், அந்தப் பகுதியில் 28 லீற்றர் கோடாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பிணையில் செல்ல நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா வடமராட்சியில் மீட்பு
எஸ் தில்லைநாதன்
வடமராட்சி கிழக்கு - மாமுனையில், சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படை முகாமையைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று செவ்வாய் (18) பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.
முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.
வீட்டில் இருந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான நந்தகுமார் சுதர்சினி என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு மற்றும் தடயவியல் பொலிசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)