
posted 4th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உதைபந்தாட்ட அணிக்கு உதவிகள்
கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால் உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு விளையாட்டுக்குரிய சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணங்களும் 03/07/2023 வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பிரதேச தேசோதய சபைத் தலைவர் இ. மயில்வாகனம் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் றமணதாஸ்,
சமாதான நீதவானும் தேசோதய அமைப்பின் செயற்பாட்டாளருமான சா. தவசங்கரி, சமூக செயற்பாட்டாளர் இர. அனுராகரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிவைத்தனர்.
அதற்குரிய நிதியினை கொலண்ட் நாட்டில் வசிக்கும் மு. லலிதா நன்கொடையளகத்தார்.
இந்நிகழ்வில் தேசோதய சபை உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)