
posted 14th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுகு இழப்பீட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்ணையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கினார்.
மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநரினால் 3.4 மில்லியன் ரூபா இவ்வாறு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் மொன்டோஸ் என்றழைக்கப்பட்ட குளிருடன் கூடிய சூறாவழி ஏற்பட்டதில் திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இறந்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கால்நடை திணைக்கள காரியாலயத்தில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம். பாசி தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இழப்பீடுகளை வழங்கினார். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)