
posted 6th July 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றது.
இதற்கான கிரியைகள் அனைத்தும் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடம்பெற்றன.
இன்று புதன்கிழமை (06) காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி இடம்பெற்று பரமேஸ்வரப் பெருமானுக்கு தீபாராதனை, விசேட பூசை இடம்பெற்று, வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணங்களுடன் 108 நடன மாணவிகளின் நிருத்தியாஞ்சலியும், கீத வாத்திய உபசாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அந்தர்பலி, பகிர்பலி என்பன வழங்கப்பட்டதன் பின்னர் பிரதான கும்பங்கள் புறப்பட்டு வீதிப் பிரதட்சிணமாக வந்து காலை 6 மணிமுதல் 7மணி வரையான மிதுன லக்ன சுபமுகூர்த்த வேளையில் ஸ்தூபி அபிஷேகம், ராஜகோபுர கும்பாபிஷேகம், அனைத்து மூர்த்திகளுக்குமான மகாகும்பாபிஷேகம் என்பன இடம்பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)