
posted 28th July 2022
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பத்தாம் நாளான இன்று(28) அடியவர்கள் வேதபாராயணம் பாடி வர மாமாங்கேஸ்வரப் பெருமான் தீர்த்தக் கரையை அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு விஷேட பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, எம்பெருமான் தீர்த்தமாடியதையடுத்து, அடியவர்கள் தீர்த்தமாடினர். இத்தீர்தோற்சவத்தில் நாட்டின் நாலா பக்கங்களிலுமிருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஆடி அமாவாசைத் தினத்தில் தாய், தந்தையரை இழந்தோர் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டித்து, பிதிர்க்கடன் செலுத்தி அமிர்தகழி தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடினால் அவர்களது ஆத்தா சாந்தியடையுமென்பது ஐதீகம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)