வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து

இலங்கை அரசியல் வரலாற்றில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இர‌ண்டாவ‌து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்ச‌ர் அலி ச‌ப்ரி அவ‌ர்க‌ளை வாழ்த்துவ‌தில் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி பெருமைய‌டைகிற‌து என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து;

வெளிவிவ‌கார‌த்துக்கு ந‌ன்கு திற‌மையும் ஆற்ற‌லும்மிக்க‌ ஒருவ‌ரை தேர்ந்த‌மைக்காக‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ பெரிதும் பாராட்டுக்குரிய‌வ‌ர்.

க‌ட‌ந்த‌ கால‌த்தில் ஒரு முஸ்லிமான‌ ஏ சி எஸ் ஹ‌மீதை வெளிவிவ‌கார‌ அமைச்ச‌ராக‌ நிய‌மித்த‌து ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியாகும். அவ‌ர் மிக‌ச் சிற‌ந்த‌ சேவையை நாட்டுக்கு செய்தார்.

அதே போல் ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணி அலி ச‌ப்ரி அவ‌ர்க‌ளை தெரிவு செய்த‌மை மிக‌ நேர்த்தியான‌ தெரிவாகும் என்ப‌துட‌ன் வெளிவிவ‌கார‌ அமைச்ச‌ர் அலி ச‌ப்ரியின் கால‌த்தில் இல‌ங்கை மிக‌ச்சிற‌ந்த‌ முன்னேற்ற‌த்தை ச‌ர்வ‌தேச‌ ரீதியில் பெறும் என‌ ந‌ம்புகிறோம்.

வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY