
posted 1st July 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்ததில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழ்நாட்டிலுள்ள தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இலங்கையை சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடி 4ஆம் மணல் திட்டில் கைவிடப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மேற்குறித்த நால்வர் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)