
posted 27th July 2022
டலஸ், சஜித் கூட்டணி தேர்வு ஜனாதிபதி ஆகாமல் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆனது நாட்டுக்கு மிகச்சிறந்த விடயமாகும்.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ரணில் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பகிரங்கமாக இனவாதம் பேசிய எவரும் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
இவ்வாறின்றி டலஸ் ஜனாதிபதி ஆகியிருந்தால் ரதன தேரர், சம்பிக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளும் அமைச்சர்கள் ஆகியிருப்பர். பின்னர், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இனவாதம் பேசியிருப்பர், அமைச்சரவையை குழப்பியிருப்பர்.
அத்துடன் தமிழ் கூட்டமைப்பும் ஆட்சியில் பங்கெடுத்து கல்முனையை முஸ்லிம் தமிழ் என இனரீதியில் பிரிக்கும் ஒப்பந்தத்தை வைத்து குழப்பியிருப்பர். கடைசியில் நல்லாட்சி போல் முஸ்லிம் அமைச்சர்கள் ஒப்பாரிதான் வைத்துக்கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும்.
நம்மவர்கள் பலருக்கு டலஸ் வராததால் ஹக்கீமும், ரிசாதும் அமைச்சர் ஆக கிடைக்கவில்லையே என்ற கவலையில் ரணிலை ஏசுகின்றார்கள்.
ஆனால் சஜித், விமல், ரதன, சுமந்திரன் ஆதரிக்கும் டலஸ் வராமல் விட்டது இறைவன் நமக்கு செய்த மிகப்பெரிய அருளாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை சரியாக புரிந்து கணித்து இன்றைய நிலையில் சமூகத்துக்கு யார் சரி என்பதை சிந்தித்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என முதலில் கருத்தை முன் வைத்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி ஐக்கிய காங்கிரஸ் கட்சியாகும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY