யாழ்ப்பாணம் - கிளிநொச்சி விசேட ரயில் சேவை நேற்று ஆரம்பமாகியது. இன்று திங்கட்கிழமை

காலை 7.50 மணியளவில் கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்த பிரயாணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார்.

உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து இலகுபடுத்தலுக்காக விசேட ரயில் சேவையை ஆரம்பித்து தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரயில் திணைக்களத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறித்த சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றைய முதல் சேவையை வரவேற்ற மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில்;

பல்வேறு முயற்சிகளின் பின்னர் புகையிரத சேவைகள் திணைக்களம் இந்த விசேட சேவையை ஆரம்பித்துள்ளது.

இதனால் அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் நன்மை அடைந்துள்ளனர். இந்த சேவையை பொதுமக்களும் பயன்படுத்தலாம் என்றார்.