
posted 30th July 2022
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பொருளாதார சிக்கலினால் மன்னார் மாவட்ட மக்கள் அதிகமானோர் மிகவும் வறுமை கோட்டுக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர் சார்ந்த குடும்பங்களாக பெரும்பாலானவர்கள் இங்கு வாழ்வதால் எரிபொருள் மற்றும் உரம் இன்மையால் பெரும்பாலான குடும்பங்கள் தொழிலின்றி காணப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மன்னார் 'மெசிடோ' நிறுவனம் நீண்ட காலமாக இவ்வாறான வறுமைக் கோட்டுக்குள் வாழும் குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு உலர் உணவு மற்றும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான உதவிகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் 'மெசிடோ' நிறுவனத்தின் தொடரும் நிவாரண பணியாக வெள்ளிக்கிழமை (29.07.2022) மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் பூமலர்ந்தான் இரட்டைக்குளம் மற்றும் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் ஓலைத்தொடுவாய் காட்டாஸ்பத்திரி ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை 'மெசிடோ' நிறுவனத்தின் மன்னார் இணைப்பாளர் யூட்சன் பிகிராடோ மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY