முருங்கனில் எரிபொருள் விநியோகம்

மன்னார் மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளால் எரிபொருளுக்கு விநியோகத்துக்காக வழங்கப்பட்ட அட்டைக்குப் பின் தற்பொழுது மன்னார் முருங்கன் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு இரண்டாவது தடைவையாக பெட்றோல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இப் பெட்றோல் வழங்கப்படாத 17 கிராம அலுவலக பிரிவுகளிலுள்ள வாகனங்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 16.07.2022 அன்று சனிக்கிழமை செட்டியார் கட்டையடம்பன் பிரிவினருக்கு காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரையும், அச்சங்குளம் மற்றும் இராசமடு பிரிவினருக்கு காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை, இத்துடன் 06.07.2022 அன்று நறுவலிக்குளம் பிரிவினருக்கு வழங்கப்படாதவர்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையும், வஞ்சியன்குளம் பிரிவினருக்கு பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரையும், முசலி பிரதேச செயலகப் பிரிவில் சிலாவத்துறை மற்றும் வேப்பங்குளம் பகுதினருக்கு பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரையும், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இசமாலைத்தாழ்வு பிரிவினருக்கு பிற்பகல் 4 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரையும், சுண்டிக்குழி பகுதினருக்கு பிற்பகல் 5 மணியிலிருந்து பிற்பகல் 7 மணி வரை வழங்கப்படும்.

மேலும், இவ்விடத்தில் எதிர்வரும் 17.07.2022 ஞாயிற்றுக்கிழமை நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிடந்தகுளம் பிரிவினருக்கு முற்பகல் 10 மணி தொடக்கம் 12.30 மணி வரையும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலைபெருமாள்கட்டு காத்தான்குளம் வட்டக்கண்டல் பிரிவினருக்கு பிற்பகல் 12.30 மணி தொடக்கம் 3.30 மணி வரையும், மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மளுவராயர் கட்டையடம்பன் பன்னவெட்டுவான் பகுதினருக்கு பிற்பகல் 3.30 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரையும், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலந்தைமோட்டை மற்றும் உமனகரி பிரிவினருக்கு பிற்பகல் 5 மணி தொடக்கம 7 மணி வரை முருங்கன் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பச் செல்பவர்கள் தங்களுடன் வழங்கப்பட்ட எரிபொருள் பதிவு செய்யப்படும் காட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கனில் எரிபொருள் விநியோகம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY