மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை கண்டித்து பேரணி

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேரணியொன்று இடம்பெற்றது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பேரணி பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் ஊடாக சென்று விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக பல்கலைக்கழகத்துக்குள் சென்று நிறைவடைந்தது.

பேரணியில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பேரணியின் நிறைவில் மாற்றுப்பாலின சமூகத்தினர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றுகையொன்றும் இடம்பெற்றது.

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை கண்டித்து பேரணி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)