
posted 30th July 2022
அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமான “பெஸ்ட் ஒப் யங்” அமைப்பு வறிய பிரதேச மாணவர் நலன் கருதி மாணவர் மகிகை எனும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றது.
பரோபகாரிகள் மற்றும் உதவு அமைப்புக்களின் அனுசரணையுடன் கல்வி முன்னேற்றத்திற்கான இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருதாக அமைப்பின் செயலாளர் ஏ. புஹாத் தெரிவித்தார்.
இதன்படி நிந்தவூர் கமுஃஅறபா வித்தியாலய ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று பெஸ்ட் ஒப்யங் அமைப்பினால் நடத்தப்பட்டது.
வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் பதியு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிந்தவூர் சீ.ஓ. லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளரும், சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளருமான ஓ.எல். சப்ரி இஸ்மத் பிரதம அதிதியாகவும், வைத்திய அதிகாரி டாக்டர். எம்.ஏ. இந்திகாப் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பெஸ்ட் ஒப்யங் அமைப்பின் தலைவர் நிஸ்மி, செயலாளர் ஏ. புஹாத், பொருளாளர் எஸ்.ஏ. பாஸித் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தொடர் தேரச்சியான மக்கள் சேவைகளுக்கு நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் பெரும் பாராட்டுத் தெரிவித்ததுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY